43
நாட்டின் 72-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி பெற்ற இந்த சுதந்திரத்தை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த அடிப்படையில் இன்று அதிரை காவல் நிலையத்தில் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காலை காவல்நிலைய வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் அதிரை நகர காவல் ஆய்வாளர் தியாகராஜன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றினார். இதில் காவல்துறையினர் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.