அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக நமது நாட்டின் 72-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிரை ரோட்டரி சங்க அலுவலத்தில் ரோட்டரி மாவட்ட ஆளுனர் Rtn.திரு.K. திருநாவுக்கரசு தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.
அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn.M.K. முகமது சம்சுதீன் மற்றும் செயலாளர்
Rtn.,Z. அகமது மன்சூர், சங்க பொருளாளர்.
Rtn.S. சாகுல் ஹமீது ஆகியோர் தலைமை ஏற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சுதந்திரதியாகிகள் பற்றி உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக ஆதரவற்ற ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளாக ஒரு பெண்மணிக்கு கிரைண்டர் மற்றும் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு துணிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மன்னார்குடி ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் அதிரை ரோட்டரி சங்க உறுப்பினர்கள்
Rtn.முகமது நவாஸ்கான், Rtn.ஆறுமுகம், Rtn.உதயகுமார், Rtn.அய்யாவு, Rtn.முகமது தமீம், Rtn.நடராஜன், Rtn.கஜேந்திரன், Rtn.அமீன் நவாஸ் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.