Home » ஈரோடு, கோவை பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது., பொதுமக்கள் அவதி.!

ஈரோடு, கோவை பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது., பொதுமக்கள் அவதி.!

0 comment

காவிரியாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஈரோடு, மேட்டுப் பாளையம் மற்றும் கோவை புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அவர்களை அதிகாரிகள் உடடினயாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது இதன் காரணமாக ஈரோடு, கோவை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன.

இதன் காரணமாக கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் நொய்யல் ஆற்றுக்கு வரும் வழியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

தண்ணீர் செல்லும் பகுதியில் வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதால், அந்த பகுதியில் தண்ணீர் வீடுகளுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அதுபோல மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பி உள்ளதால், அங்கிருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீர் பவானி தாமன்னா வாட்டர் ஹவுஸ் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பவானி அம்மன் ஆலயம் நீரில் மூழ்கி உள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினர் அங்கிருந்து மீட்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்கவைத்துள்ளனர்.

மேலும், வெள்ளம் காரணமாக கொடுமுடி, சத்திரபட்டி, கோம்பு பாளையம், கொளாநல்லி, காசிபாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும், அங்குள்ள பொதுமக்கள், மேடான பகுதிகளுக்கு சென்று தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ள தால், திருப்பூர் பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமராவதி கரையோர மக்கள் மேடான பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்கும் படியும், ஆற்றுக்குள் இறங்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளதால், அங்கிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter