அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றத்தினர் கடற்கரைத் தெருவில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத்தின் புதிய நிர்வாகம் தெரு சார்ந்த அடிப்படை தேவைகளை அதிரடியாக செயல்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கடற்கரைத் தெரு நீர்நிலைகளில் வளர்ந்து நிற்கும் காட்டு கருவேல மரங்களை அழிக்கும் பொருட்டு முடிவு செய்து , அதற்காக தெருவாசிகளிடமே நிதிதிரட்டி தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது.
இப்பணிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கடற்கரைத்தெரு முஹல்லா நிர்வாகிகள் , தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்ற இளைஞர்கள் , தெருவாசிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் கட்டமாக அதிக அளவில் வளர்ந்திருந்த காட்டு கருவேல மரங்கள் அடியோடு வெட்டப்பட்டு தற்போது குளங்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அரசை நம்பி பலனில்லை என்பதை அறிந்து நீர்நிலைகளை தங்கள் சொந்த செலவிலேயே தூர்வாரி நிலத்தடி நீரை உறிஞ்சும் கருவேல மரங்களையும் வெட்டி நீர்நிலைகளை பாதுகாக்கும் கடற்கரைத் தெருவாசிகளின் இச்செயல் பாராட்டுக்குரியது.