59
கர்நாடகவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து காவிரி நீரின் வரத்து தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்த நீரானது கொள்ளிடம் வழியாக கடலில் கலப்பதை கண்டித்தும் கடை மடை பகுதிக்கு உரிய நீரை பாசனத்திற்க்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 23 தேதி நீர் நிலை பாதுகாப்பு அமைப்பின் சார்பில் அதிரை சேது சாலையில் மறியலில் ஈடுபட போவதாக துண்டுப்பிரசுரம் வெளியானது.
இதனை அடுத்து பேச்சு வார்த்தைக்கு வருமாறு மேற்கண்ட அமைப்பின் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது முதற்கட்டமாக 5 நீர் நிலைகலுக்கு நீர் தர சம்மதம் தெரிவித்தாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது.