Home » அதிரை எக்ஸ்பிரசின் வாழ்த்துச்செய்தி !

அதிரை எக்ஸ்பிரசின் வாழ்த்துச்செய்தி !

0 comment

உலகின் ஒப்பற்ற திருநாட்களின் ஒன்றான ஈதுல் அல்ஹா எனும் ஹஜ் பெருநாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

உலக நாடுகளில் ,நேற்றும் இந்தியாவில் இன்றும் (22.08.2018) பக்ரீத் பண்டிகை என்ற பெயரில் முஸ்லீம்கள் கொண்டாடுகிறார்கள்.

நரபலியை தடுக்கும் நோக்கத்தையும், இறைவனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வரலாற்றுப் பின்னணிக் கொண்ட இத்திருநாளில்; முஸ்லீம்கள் ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து, அந்த உணவை உறவினர்களுக்கும், ஏழை-எளியவர்களுக்கும் கொடுத்து மகிழ்கிறார்கள்.

உலகில் 175 கோடி மக்கள் கொண்டாடும் இத்திருநாளில்; மனிதநேயம், சகிப்புத்தன்மை, பிறர்நலம் நாடுதல், அமைதியான உலகை உருவாக்குதல் போன்ற உயரிய பண்புகளை வளர்க்க உறுதியேற்போம்.

நமது தாய்திருநாடு இந்தியாவில் சகோதரத்துவமும், அன்பும் தழைக்கவும், வறுமை ஒழியவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு.
ஹசன்
அதிரை எக்ஸ்பிரஸ்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter