68
அதிரையில் ஈத்மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று காலை தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில் மாற்றுமத சகோதரர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதில் திமுக மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு உரையாற்றினார்.
பின்னர் நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
முன்னதாக அலுவலகத்தில் மேற்கு ஒன்றிய சிறுபான்மையினர் அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் அகமது வரவேற்றார்.
இந்நிகழ்வில் நகர செயலாளர் இராம குணசேகரன் ,மாவட்ட பிரதிநிதி பகுருதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.