57
கலாம் நண்பர்கள் இயக்கத்தினர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் உதவி.
வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிகளை பல்வேறு தரப்பினர் செய்து வருகின்றனர். கலாம் நண்பர்கள் இயக்கத்தினர் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வசூல் செய்தனர்.அதனடிப்படையில் வாங்கிய பொருட்களைமாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் தஞ்சை மாவட்ட தலைவர் மதன் ஆகியோர் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்தனர்.