59
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை வா.உ.சி மைதானத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான வைஃபை வசதியுடன் கூடிய செயற்கை மரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். தங்கமரம் எனப்படும் இந்த மரத்தை சுற்றி சுமார் 350 சுற்றளவுக்கு இலவச வைஃபை வசதியை பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மரத்தை சுற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பதோடு பாதுகாப்புக்காக சிசிடிவி கேமெராக்களும், குடிநீர் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த ஒரு மரம் மூலம் மாநகராட்சிக்கு விளம்பரம், மின்சக்தி, இடத்திற்கான தொகை என ஆண்டிற்கு ரூ.13 லட்சம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.