தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் கொள்ளிடம் ஆற்று நீர் குடிநீர் திட்டக்குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.
பட்டுக்கோட்டை, பள்ளத்தூர்,இரண்டாம்புளிக்காடு வழியாக மல்லிப்பட்டினம் ஈசிஆர் சாலையின் ஓரத்தில் கொள்ளிடம் ஆற்றுநீர் குடிநீர் குழாய் பூமிக்கடியில் பதியப்பட்டு நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் ஊராட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர்.ஆனால் அதிகாரிகள் முறையான பதிலளிக்கவில்லை என்று இளைஞர்கள் குற்ளஞ்சாட்டுகின்றனர்.
இதைப்போல் தவ்ஹீத் ஜமாத் பள்ளி பின்புறம் அமைந்துள்ள வேறொரு தண்ணீர்தொட்டியில் இருந்து குடிநீர்வழங்கும் குழாயில் மூன்று நாட்களாக குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி பெருக்கெடுத்து ஓடுகிறது.இது குறித்தும் புகார் அளித்தும் முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து நமது அதிரை எக்ஸ்பிரஸிற்கு சுலைமான் கூறுகையில் கடந்த இரண்டு நாட்களாக வெவ்வேறு இடங்களில் ஏற்பட்டிருக்கும் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது.குடிநீர் இன்றி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் வேலையில் இதுபோன்ற அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் தண்ணீர் வீணாகிவருகிறது, மேலும் புகார் அளித்தும் அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளா வண்ணம் நடந்து கொள்கின்றனர் என்று கூறினார்.