தஞ்சை மாவட்டம்:அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே சாலை விபத்தினை ஏற்படுத்த முயன்ற தனியார் பேருந்து.
பட்டுக்கோட்டையிலிருந்து அதிரை நோக்கி இன்று (01/09/2018) சென்றுகொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் போட்டி போட்டு முன்னும் பின்னுமாக வந்துகொண்டிருந்தது. அப்பொழுது பகல் 12:15 மணியளவில் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை பேருந்து நிலையம் அருகே வந்தபொழுது (RST – ராஜமாணிக்கம்) என்ற தனியார் பேருந்து முன்னே சென்ற பேருந்தை கடக்க முயன்றபொழுது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோத முயன்று சாலை விபத்தினை ஏற்படுத்த முயன்றது தனியார் பேருந்து.
இதனால் அப்புகுதியில் பேருந்து ஓட்டுனருக்கும் இருசக்கர வாகன ஓட்டிக்கும் அரைமணிநேரம் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் போது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.