107
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தை அடுத்த இராஜாமடம் அருகே உள்ள சின்ன ஆவுடையார் கோவில் எனும் ஊரின் குடி நீர் தேவைக்காக ECR சாலையில் பாதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் நீர் வழிந்தோடும் நிலையில் உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், இப்பகுதியில் ஏற்பட்டு வரும் குடி நீர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு இப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் நீர் வழிந்தோடும் காரணத்தினால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.மேலும் தொடர்ச்சியாக நீர் வெளியேறுவதால் சாலையில் பெரும் பள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.