Home » இன்று ஆசிரியர் தினம் அதிராம்பட்டினம் மேம்பாட்டு சங்கமம் தலைவர் எம்,எஸ் , எம்,யூசுப் அவர்கள் வாழ்த்துச் செய்தி…!

இன்று ஆசிரியர் தினம் அதிராம்பட்டினம் மேம்பாட்டு சங்கமம் தலைவர் எம்,எஸ் , எம்,யூசுப் அவர்கள் வாழ்த்துச் செய்தி…!

by admin
0 comment

வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது அத்தகைய சிறப்பு மிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆசிரியர் தினம் அனுஷ்டிக்க வேண்டும் என்று அதிரை மேம்பாட்டு சங்கமம் தலைவர் எம்,எஸ்,எம்,யூசுப் கூறினார்

ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ம் தேதி அனுஷ் டிக்கப்பட்டு வருகிறது இதை அனைத்து மக்களும் கடைபிடித்து வரவேண்டும் வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. அவர்களைக் கொண்டாடும் நாள் இன்னாள்.

சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ‘ஆசிரியரை’ கௌரவப்படுத்தும் நோக்கில் பொதுவாக ஆசிரியரை கண்ணியமாக மதித்து மரியாதை செய்யும் பலக்கங்கல் நமது நாட்டில் அதிகமாக காணப்படுகிறது அவரவர் சமய கலாசார பின்னணிகளுக்கு ஏற்ப இதனை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் உள்ளன.

அந்த வகையில் அவர்களை கௌரவித்து, மரியாதை செய்து, நினைவு கூறுவதற்கு வருடத்தில் ஒரு கணம், ஒரு ‘ஆசிரியர் தினம்’, அவசியம் தான் என்று அதிரை மேம்பாட்டு சங்கமம் தலைவர் எம்,எஸ்,எம்,யூசுப் அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter