95
மனித நேய மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 7 ம் தேதி திருச்சியில் அரசமைப்பு சட்ட, மாநிலம் தழுவிய மாநாடு நடைபெற உள்ளது.
இம் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றியும், மாநாட்டிற்காக செயல் வீரர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் அதிரை நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் மத்தியில் மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா அவர்களின் இல்லத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூடியிருந்த தமுமுக, மமக முன்னால் இந்நாள் நிர்வாகிகள் மத்தியில், இக் கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி ஹுமாயூன் கபீர், மமக தலைமை கழக பேச்சாளர் திருச்சி உதுமான் அலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியது குறிப்பிடத்தக்கது.