72
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் சார்பாக ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டின் விளக்கப் பொதுக்கூட்டம் செப்டம்பர் 10 அன்று மாலை நடைபெற இருக்கிறது.
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் சேக் ஜலால் தலைமையில் நடைபெறுகிறது. மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் கலந்துக்கொண்டு ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு பற்றி சிறப்புரை ஆற்றுகின்றனர்.
விளக்க பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வருகை தருமாறு நகரத்தலைவர் அப்துல் பஹத் அழைப்புவிடுத்துள்ளார்.