155
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பெட்ரோல்,டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 10 அன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தது.இந்நிலையில் பல கட்சிகள்,வணிகர் சங்கங்கள்,அமைப்புகள் என பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இதனைதொடர்ந்து பாரத் பந்திற்கு முழுஆதரவு அளித்து அன்றைய தினம் மீன்பிடி தொழிலுக்கு செல்வதில்லை என தஞ்சை,புதுகை, இராமநாதபுரம், நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக தமிழக விசைப்படகு மீனவர் நலசங்க மாநில செயலாளர் AK.தாஜீதீன் அறிவித்துள்ளார்.