68
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு முன்னர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலாக ஜெயா டிவி இருந்தது.
ஆனால் தற்போது அந்த சேனல் தினகரன் அணியின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. இதனால் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் முயற்சியால் ஒரு புது செய்தி சேனல் துவங்கப்படவுள்ளது.
இந்த சேனலுக்கு ‘நியூஸ் ஜெ‘ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இச் சேனலின் லோகோ மற்றும் மொபைல் ஆப் ஆகியவை எதிர்வரும் 12ஆம் தேதி அறிமுகம் செய்யவிருப்பதாகவும் இம்மாத இறுதியில் இந்த சேனலின் முதல் ஒளிபரப்பு தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.