ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 2 மணி நேரமாக கூட்டம் நடந்தது.
இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.