214
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் எனும் பெயரில் முழு கடையடைப்பு நடைபெற உள்ளது.
இந்த முழு அடைப்பிற்க்கு அதிரை நகர ஆட்டோ ஓட்டுனர் சங்கமும் முழு ஆதரவு அளிக்கும் வகையில் இன்று ஆட்டோக்கள் ஓடாது என்று அதிரை ஆட்டோ ஓட்டுனர் சங்க செயலர் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதை போன்று அதிரையை அடுத்துள்ள மல்லிப்பட்டினத்திலும் ஆட்டோக்கள் இயங்காது என்று ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.