87
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்து பாரத் பந்த் எனும் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது.
இந்த முழு அடைப்பிற்கு பலதரப்பட்ட எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.
இம் முழு அடைப்பிற்கு அதிரை நகரில் உள்ள பெரும்பாலன வணிக நிறுவனங்கள், சிறு தொழில் முனைவோர் என அனைவரும் ஆதரவு அளித்து கடைகளை அடைத்திருக்கின்றனர்.
எப்போதுமே பரபரப்பாக காணப்படும் அதிரை பேரூந்து நிலையம் ஆட்டோ, கால் டாக்ஸி போன்ற வாகனங்கள் இயங்காததால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.