43
புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது, “புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான 100 அடி சாலைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்டப்படவுள்ளது. இதுதவிர காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளார் பைபாஸ் சாலை மற்றும் பட்டமேற்படிப்பு மையத்திற்கும் கருணாநிதி பெயர் வைக்கப்படவுள்ளது, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கையும் அமைக்கப்படவுள்ளது” என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இதனை தொடர்ந்து, புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் உள்ள குளங்கள் மற்றும் கால்வாய்களை தூர்வார அரசு முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.