11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை மற்றும் ஆஸ்பத்திரி தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து, எலும்புக்கூடு போல கீழே விழும் அபாயம் உள்ளது.அந்த பகுதிகளில் குடியிருப்புகள் மக்கள் நடமாடும் பகுதிகளாகவும் இருக்கிறது.
இதுசம்மந்தமாக அதிரை,பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மின்சார அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஹாலிக் மரைக்காயர் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இன்றி தொடர்கிறது.ஏதும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பங்களை மின்சார வாரியம் சரிசெய்து விட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையாகவும் எதிர்ப்பார்பாகவும் இருக்கிறது.