100
திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதை கொண்டாடும் வகையில் நேற்று தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய புதுப்பட்டினம் கிளையின் சார்பில் விழா நடைபெற்றது.
புதுப்பட்டினத்தில் நடைபெற்ற இவ்விழாவில் திமு கழகத்தின் மூத்த முன்னோடிகளான ஜனாப் HMS. சாகுல் ஹமீது மற்றும் ஜனாப். முகமது ஹனிபா ஆகியோர் கழக உறுப்பினர்கள் முன்னிலையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அமீரக திமுகவின் இணைச்செயலாளர் மு.சாகுல் ஹமீது மற்றும் புதுப்பட்டினம் கிளையின் திமுக நிர்வாகிகள் ம. காதர்சே க்காதி, அ.பஷீர்முகம்மது, யா.அப்துல்ரஹ்மான், அ.துல்கருனை ஆகியோர் செய்திருந்தனர்.