அதிரையில் உள்ள மின் வாரியத்தின் அலட்சியம் பற்றி அளவுக்கு அதிகமான செய்திகள் ஊடகங்களில் உலாவுவதை அதிரையர்கள் அனைவரும் அறிவர்.
இப்படியிருக்கும் சமயத்தில் அதிரை புதுமனைத்தெரு, அம்பேத்கர் நகர் 21வது வார்டு பகுதியில் உள்ள மின் கம்பம் மிகவும் பேராபத்தாக முழு மின் கம்பமே அறுந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த மின் கம்பம் அருகே ஏராளமான வீடுகள் இருக்கின்றன. அது மட்டுமின்றி மாலை நேரத்தில் சிறுவர் சிறுமியர் இவ்விடத்தில் தான் விளையாடுகின்றனர்.
இப்படியிருக்கும் நிலையில் திடீரென மின் கம்பம் முறிந்து விழுந்தால் அதிரை மின் வாரியம் அசம்பாவிதங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுமா என்பது அப்பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.
மாதத்தில் ஒவ்வொரு முறையும் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யும் மின்வாரியம், இது போன்று அறுந்து விழ காத்திருக்கும் மின் கம்பங்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் காரணம் புரியவில்லை.
காவு வாங்கப்படுவதற்கு முன் முறிந்து விழ காத்திருக்கும் இந்த மின் கம்பத்தை அதிரை மின் வாரியம் உடனடியாக மாற்றுமா அல்லது மங்குனி போல தூங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.