Home » ரோட்டரி சங்கம் நடத்திய நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி..!!(முழு விவரம்)

ரோட்டரி சங்கம் நடத்திய நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி..!!(முழு விவரம்)

0 comment

தஞ்சை மாவட்டம்: அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக நேற்று (14/09/2018) வெள்ளிகிழமை மாலை 5 மணியளவில் அதிரை ரிச்வே கார்டன் மஹாலில் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று டாக்டர்.S.ராதா கிருஸ்ணண் அவர்களின் பிறந்த தினத்தில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில் சிறந்த ஆசிரியர்களுக்கான NATION BUILDER (தேச கட்டமைப்பாளர் விருது) வழங்கும் நிகழ்ச்சி அதிரை ரோட்டரி கிளப் சார்பாக சிறப்பாக நடைபெற்றது.

இதில் அதிராம்பட்டினத்தில் உள்ள 5 அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடு நிலைப்பள்ளியில் தேர்வு செய்யப்பட்ட ஆறு ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரிர்களுக்கான NATION BUILDER AWARD சான்றிதழ் மற்றும் சிறப்பு கேடயமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

இந்த விருதுகளை அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னால் தலைமையாசிரியர்.
ஜனாப்.SKM.ஹாஜா முகைதீன், மற்றும் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்
திரு.A.அன்பழகன் அவர்களும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்..

முன்னதாக அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn.MK. முகமது சம்சுதீன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு மண்டலம் 13ன் துனை ஆளுனர் Rtn.K.திருநாவுக்கரசு மற்றும் முத்துபேட்டை ரோட்டரி கிளப் முன்னால் துனை ஆளுனர்.
மெட்ரோ மாலிக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

நல்லாசிரியர்கள் விருது பெற்றவர்களின் விபரங்கள்..!!

T.விஜயா
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
அண்ணா தெரு,
அதிராம்பட்டினம்.

◆R.சுதா
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
கடற்கரை தெரு,
அதிராம்பட்டினம்.

◆A.ஹில்டா மேரி.
அரசு மேல் நிலை பள்ளி.
ராஜாமடம்.

◆S.ஆரோக்கிய ராஜ்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி,
நடுத்தெரு, அதிராம்பட்டினம்.

◆T.சுபாஸ் சந்திர போஸ்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி,
கரையூர் தெரு,
அதிராம்பட்டினம்.

◆S.அன்பரசன்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி,
கரையூர் தெரு,
அதிராம்பட்டினம்.

முடிவில் அதிரை ரோட்டரி சங்கத்தின் செயலாளர்.
Z.அகமது மன்சூர் அவர்கள் அனைவருக்கும் நன்றி உரை ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியை பொருளாளர்
Rtn.S.சாகுல் ஹமீது,
மற்றும் Rtn.M.உதய குமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
ரோட்டரி சங்க மாவட்ட மண்டல மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter