Home » தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க கூட்டதிற்கு அழைப்பு!!

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க கூட்டதிற்கு அழைப்பு!!

0 comment

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கம் சென்னை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.வேணுகோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்று வந்தது.

தற்போது விசைப்படகு மீனவர்கள் சொல்லென்னா துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

இதனால் விசைப்படகு மீனவர் சங்கத்தை கூட்டி முக்கிய முடிவுகள் மேற்கொள்ளவும், மேலும் டீசல் விலை அதிகரிப்பினால் மீனவ தொழிலை தொடர்ந்து நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

டீசல் விலையை ஏற்றுமதி விலைக்கே வழங்கிடக் கோரியும், இலங்கை அரசின் தற்போதைய கடுமையான சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இதனை கண்டுக் கொள்ளாமல் இருப்பதனாலும், மீன் வளம் இல்லாமல் வாழ்வாதாரம் கெட்டு மீன்பிடி தொழில் கேள்விக்குறி ஆக்கப்பட்டு வருவதற்கு தீர்வு காணவும், மீனவர் சங்கத்தின் எதிர்கால நிலைகளை பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கவும் கடலோர விசைப்படகு மீனவர் சங்கம் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் (24-09-2018) திங்கள்கிழமை காலை 10 மணியளவில் பட்டுக்கோட்டை மினி பிரியா திருமண மண்டபம் (பேரூந்து நிலையம்) அருகில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள விசைப்படகு மீனவர்கள் கலந்துக் கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter