79
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் முக்கிய கடைவீதிகளில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்.
அதிரை மக்களின் நீண்டநாள் கோரிக்கையும்,அடிப்படை கோரிக்கையும் என்பதும் தரமான சாலை என்பதும் ஒன்றாகும்.அதிரை பேரூராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்தொடர்ச்சியாக காலேஜ் முக்கத்திலிருந்து ஜாவியா,நடுத்தெரு வழியாக சேர்மன்வாடி வரை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன் பழைய தார்சாலை உடைக்கப்பட்டு அப்படியே கிடந்தது, இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளானர்கள்.இப்போது அமைக்கப்படும் சாலையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.