76
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பேராவூரணி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (25-09-2018) செவ்வாய்க்கிழமை பேராவூரணி, சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், பெருமகளூர், பூக்கொல்லை, காலகம் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.