Home » 1,30,000 கோடி ரூபாய்.. மலைக்க வைக்கும் ரபேல் ஒப்பந்த முறைகேடு.. பாஜக மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு !

1,30,000 கோடி ரூபாய்.. மலைக்க வைக்கும் ரபேல் ஒப்பந்த முறைகேடு.. பாஜக மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு !

0 comment

ரபேல் ஒப்பந்தம் மூலமாக பாஜக அரசு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கும் ரபேல் ஊழல் குறித்து காங்கிரஸ் தொடர்ச்சியாக ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது. இதில் யார் எல்லாம் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள், எவ்வளவு பணம் கைமாறி இருக்கிறது என்றும் தொடர்ந்து ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது.
ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து பாஜக அரசு வாங்கிய ரபேல் ரக விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

பாஜக அரசு மூலம் ரபேல் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரு விமானத்திற்கு ரூ.351 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மொத்தமாக 36 விமானம் வாங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொத்தம் 12,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று காங்கிரஸ் கணித்து கூறியது. அதாவது பாஜக வேண்டுமென்று அதிக விலைக்கு விமானங்களை வாங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்த ஊழலின் தொகை உண்மையாக அதிகம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மொத்தமாக இந்த ஒப்பந்தம் மூலம் 1,30,000 கோடி ரூபாய் ஊழல் நடந்து இருக்கிறது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ஊழல் இதுதான் என்றும், இதனால் கேள்விக்கு உள்ளாகி உள்ளது என்றும் கூறியுள்ளது.

இது எப்படி நடந்து இருக்க முடியும் என்று காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. அதன்படி ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் முறைகேடாக 1,30,000 கோடி ரூபாய்க்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஊழலின் மொத்த மதிப்பு 1,30,000 கோடி ரூபாயை தாண்டும் என்று காங்கிரஸ் தரப்பு கூறுகிறது.

மேலும் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்திற்கு வெறும் 10 நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளித்ததே நிர்மலா சீதாராமன்தான், அதற்கான ஆவணங்களில் நிர்மலா சீதாராமனின் கையெழுத்து இருக்கிறது என்றும் காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இந்த ஊழலில் இரண்டு முக்கிய தலைகள்தான் தலையிட்டு இருப்பதாக காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. பிரதமர் மோடி பிரான்ஸ் சென்ற பின்தான் இந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மோடிக்கு இதில் பெரிய தொடர்பு உள்ளது என்றுள்ளது. அடுத்தபடியாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு லைசன்ஸ் வழங்கியது தொடங்கி இதற்கு முழு முதற்காரணமாக இருந்தது பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான். அவர்தான் இதில் இரண்டாவது குற்றவாளி என்றும் கூறியுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter