71
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று 26/09/2018 புதன்கிழமை அதிரை பேரூராட்சியில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அதிரை பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர் அன்பரசனிடம் அளித்த அக்கோரிக்கை மனுவில், அதிரை வார்டு எண் 3ல் அமைந்துள்ள A.J.நகரில் முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் சாக்கடை கழிவு நீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனை சரிசெய்து சாக்கடை வாய்க்கால்கள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.