58
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் இம்மாதம் 17ஆம் தேதி முதல் தொடர் சேவைத் திட்டங்கள் செய்து வருகிறது. அதன் 8வது நாள் திட்டமாக அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்ட் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்குபெறும் பார்வைக்கோர் பயணம் கண்தான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
இன்று 26.09.2018 புதன்கிழமை பகல் 2 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் தொடங்கிய இப்பேரணி அதிரை பேருந்து நிலையம் வரை சென்று நிறைவு பெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்திக்கொண்டனர்.