55
அதிரை பேரூராட்சி நிர்வாகம் வீடு, குடிநீர் மற்றும் கடைகளுக்கு பன் மடங்கு வரி விதிப்பை விதித்துள்ளது.
இதனை கண்டித்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதிரை பேரூந்து நிலையம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு நகர செயலாளர் N.காளிதாஸ் தலைமை வகிக்க, துனை செயலாளர்கள் S.பன்னீர் செல்வம், M.L.A.ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன உரையை மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி MBA., BL., மாநில குழு உறுப்பினர் இரா.திருஞானம் உள்ளிட்ட 9 பேர் கண்டன உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து 4 அம்ச கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
- வீடு, குடிநீர், கடை போன்றவற்றிற்கு அதிரை போரூராட்சி வித்தித பன் மடங்கு வரியை திரும்ப பெற வேண்டும்.
- நிலத்தடி நீரை பாதுகாக்க அதிரையில் உள்ள ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு அதனை தூர்வாரி தண்ணீர் நிரப்ப வேண்டும்.
- அதிரை – மகிழங்கோட்டை சாலை ஆக்கிரமிப்புகளை துரிதமாக அகற்றி மக்களுக்கு உறுதுனை செய்ய வேண்டும்.
- அதிரை ECR சேது ரோடு சந்திப்பில் ரவுண்டானா கட்டித் தருவதாக நெடுஞ்சாலைத்துறை அளித்த வாக்குறுதி இன்று வரையிலும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது, எனவே அதனையும் விரைவாக கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.