அதிரை நடுதெருவை சேர்ந்தவர் ஹாஷிம் இவரது மகள் ஹவ்னா வயது 3 ,இன்று மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார் அப்பொழுது அவ்வழியாக வந்த பர்தா அணிந்த இரண்டு பெண்கள் குழந்தையை தூக்கி அருகில் இருந்த சந்திற்க்கு சென்றள்ளார்.
இதனை கண்ட அப்பகுதியினர் யாரோ குழந்தையின் உறவினர்கள் தூக்கி செல்வதாக நினைத்து கொண்டனர்.
சிறிது நேரத்தில் குழந்தையின் அழு குரல் கேட்ட அப்பகுதியினர் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது கழுத்தில் கிடந்த ஒன்றரை பவுன் தங்க செயின் காணாமல் போனது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் தீவிரமாக மர்ம பெண்களை தேடி வருகின்றனர்.
அதிரையில் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வது வாடிக்கையாகி விட்ட நிலையில், தற்பொழுது டீசண்ட்டாக புர்கா அணிந்த பெண்கள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.