பட்டுக்கோட்டை மட்டுமல்ல அதனைச் சுற்றி இருக்கிற, மணமேல்குடி , முத்துப்பேட்டை பேராவூரணி , ஒரத்தநாடு மன்னார்குடி என பல பகுதிகளிலிருந்து, கிராமப்புறங்களிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை நாடி வருகிறார்கள்.
வரக்கூடிய நோயாளிகளும்,
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற நோயாளிகளை பார்க்க வருபவர்களும் தங்களுடைய இருசக்கர , நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.
அரசு மருத்துவமனைக்கு முகப்பில் கட்டண இருசக்கர வாகன நிறுத்தம் இருந்தும் தற்போது செயல்படாமல் இருக்கிறது.
மருத்துவமனைக்கு முன்பு உள்ள சிறிய இடத்தில் இருசக்கர வாகனங்களை பொதுமக்கள் தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்வதால் மிகுந்த இடைஞ்சல் ஏற்படுகிறது
மருத்துவமனை காவலர்கள் அதை எடுத்துச் சொன்னால் பொதுமக்கள் கட்டுப்பட மறுக்கிறார்கள்.
தாறுமாறாக வாகனத்தை விட்டு செல்கிறார்கள்.
இதனால் ஏராளமான நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
சரி மருத்துவமனைக்கு வெளியில் நிறுத்தி விட்டு போகலாம் என்று பார்த்தால், வெளியே மருத்துவமனையை ஒட்டி தக்காளி , வெங்காய கடைகளும் சாலையோரக் கடைகளை ஆக்கிரமித்த வண்ணம் உள்ளது.
தயவுசெய்து அரசு மருத்துவமனை நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி மருத்துவமனைக்கு மிக அருகில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனம் நிறுத்திவிட்டு செல்வதற்கு வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் உள்ளே இருக்கக்கூடிய கட்டண இருசக்கர வாகன நிறுத்தத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வருமாறும், இருசக்கர வாகனத்தில் வரக்கூடிய நோயாளிகள் மற்றும் பொதுமக்களை முறையாக நிறுத்தச்சொல்லி கண்டிப்புடன் காவலர்கள் கட்டாயப்படுத்து மாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு.,
யஹ்யா.