53
அதிரையில் பேரூராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஐக்கிய தேசிய மக்கள் கட்சியும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை(28.09.2018) மாலை அதிரை பேருந்து நிலையத்தில் இந்த கண்டன பொதுக்கக்கூட்டமானது நடைபெற்றது.
இதில் ஐக்கிய தேசிய மக்கள் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கண்டன உரையாற்றினர். இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கட்சியினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.