பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட பேரணி மற்றும் வெற்றி நிச்சயம் என்ற கேள்வி வினா நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள ஆரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்கனிக் கல்லூரி மாணவ மாணவிகள் ரோட்டரி சங்கத்தினர் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் பற்றிய துண்டு விளம்பர தட்டிகள் ஏந்தியும், கோஷமிட்ட படியும் சென்றனர். அறந்தாங்கி சாலை காந்தி சிலை அருகில் துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோமலவிலாஸ் திருமண மண்டபத்தில் வந்து சேர்ந்தது. அங்கு பள்ளி மாணவ, மாணவியர்களை நான்கு அணிகளாக பிரித்து அவர்களிடம் வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் வினாடி வினா கேள்வி பதில் நிகழ்ச்சியினை நடத்தி வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசினை பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த உதயக்குமார், ராம ஈஸ்வர், இரண்டாம பரிசினை நாட்டுச்சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சுவேதா, சுமித்ரா, மூன்றாம் பரிசினை பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மகாலட்சுமி, சிவபாரதி மற்றும் கரம்பயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அஜிதா, சத்தியகீதா உள்ளிட்டோர் வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.வெற்றிபெற்றவர்களுக்கு நீதிபதிகள் அல்லி மற்றும் பிரியா ஆகியோர் நினைவு பரிசுகள் வழங்கினர். முன்னால் நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள என பலரும் கலந்துகொண்டனர்.
பட்டுக்கோட்டையில் காவல்துறை மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பேரணி
336