46
தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் நிறைவாக சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.
நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இவ்விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் இவ்விழாவில் பங்கேற்பதற்காக அதிரை அதிமுகவினர் இன்று பேருந்துகள் மூலம் சென்னை புறப்பட்டனர். அதிரை சுற்றுவட்டார பகுதி அதிமுகவினர் ஒரு பேருந்து , அதிரை அதிமுகவினர் ஒரு பேருந்து என இரண்டு பேருந்துகளில் சென்னை புறப்பட்டனர். இதில் அதிரை நகர அதிமுக செயலாளர் பிச்சை, துணை செயலாளர் தமீம் உள்பட அதிமுகவினர் பலர் சென்றுள்ளனர்.