அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் கடந்த 17ஆம் தேதி முதல் தொடர் சேவை திட்டங்களை செய்து வருகிறது. அத்தொடர் சேவையின் நிறைவு நாளான இன்று அதிரை லயன்ஸ் சங்கம், திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் பித்தப்பை கல்லீரல் குடல் இறக்கம் நோய்கள் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் அதிரை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு லயன்ஸ் சங்க தலைவர் பேரா.எம்.ஏ.அப்துல் காதர் தலைமை வகித்தார். பேரா. மேஜர் எஸ்.பி.கணபதி மற்றும் லயன் செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமை லயன்ஸ் மண்டலத் தலைவர் பொறியாளர் K. ஸ்ரீராம் துவக்கி வைத்தார். லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் சூப்பர் அப்துல் ரஹ்மான், அப்துல் ஜலீல்தீன், பேரா. செய்யது அகமது கபீர்,
ஹாஜி.அப்துல் ஹமீது, ஆறுமுகசாமி, சேக்கனா நிஜாம், ஓம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மருத்துவ முகாமில் டாக்டர் கலைச்செல்வி ராஜரெத்தினம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பயனாளிகளுக்கு பரிசோதனைகளும் ஆலோசனைகளும் வழங்கினர். டாக்டர்.ராஜரெத்தினம் உள்ளிட்ட 15 பேர் கொண்ட மருத்துவக் குழு இதில் கலந்து கொண்டனர். இம்முகாமில் 60க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையின் மேலாளர் சரவணகுமார் செய்திருந்தார்.