மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு வருகிற 7ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் திருச்சியில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இம்மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கும் வகையில் இன்று திமுக தலைவரை மமக நிர்வாகிகள் சந்தித்தனர். மமகவின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த மமக நிர்வாகிகள், மாநாடு தொடர்பான அழைப்பிதலை வழங்கி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.