காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்ய திமுக தொண்டர்களுக்கு ஆனையிட்டார்.
இதனையடுத்து திருவாரூர் பேரூந்து நிலையத்தில் இன்று திமுக சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
திமுகவின் இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மமக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கூட்டணி கட்சியினர் கலந்துக் கொண்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டு, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.