62
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக மழை கொட்டி வருகிறது.
இந்நிலையில் பட்டுக்கோட்டையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பேருந்து நிலையம் முழுவதும் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் மழைநீரானது, பேருந்து நிலையம் முழுவதும் தேங்கி கிடக்கிறது.
அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் மழைநீரால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இவ்விஷயத்தில் பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் விரைந்து செயல்பட்டு, பேருந்து நிலையத்தில் முறையான வடிகால் வசதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.