167
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடல் வழியாக கஞ்சா கடத்துவதாக கடலோர காவல் படைக்கு தகவல் வந்ததது.
இதனையடுத்து இன்று காலை கடலோர காவல்படையினர், ஊர்காவல் படையினர் செங்காங்காடு கடல் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அம்பாசிடர் காரிலிருந்து அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த படகு மூலம் கஞ்சா பொட்டலங்களை 5 பேர் ஏற்றி கடத்த முயன்றனர். போலீசாரை பார்த்ததும் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். கார்த்திகேயன்(35) என்பவர் பிடிபட்டார். மேலும் கடத்தல் கும்பலிடமிருந்து 150 கிலோ எடையுள்ள 90 பாக்கெட் கஞ்சா பொட்டலங்கள், ஒரு அம்பாசிடர் கார், ஒரு படகு, 2 பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கார்த்திகேயனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.