69
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் ஊராட்சி புதுமனைத்தெரு பகுதிகளில் தெருவிளக்கு எரியாமல் இருண்டு காணப்படுகிறது.
புதுமனைத்தெரு,கேஆர் காலணி போன்ற தெருப் பகுதிகளில் மின்கம்பத்தில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை.இதனால் இந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.மேலும் இருட்டாக இருப்பதால் நடந்துசெல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.மேலும் இது மழைக்காலமாக இருப்பதால் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் அதிகமாக வெளியே வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.ஆகவே ஊராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் உடனடியாக மின்விளக்குகளை அமைத்து தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
ஷாபி இமாம் தெரு,சீதக்காதி தெரு போன்ற பகுதிகளிலும் இதே நிலை தான் நீடித்து வருகிறது.