47
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் தயார் நிலையில் ஊழியர்கள்
தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழக அரசு, மாவட்ட நிர்வாகங்கள்,அரசு அதிகாரிகள் மழை, வெள்ள பாதிப்பின்றி மக்களை பாதுகாக்க அறிவுறுத்தியுள்ளது. அதிரையில் மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது.இதையொட்டி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தினர் மணல் மூட்டைகள், உள்ளிட்ட வெள்ள தடுப்பு பொருட்களை போர்கால அடிப்படையில் தயார்படுத்தி வைத்துள்ளனர்.
மேலும் களப்பணியாற்ற ஊழியர்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.