60
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட முத்தமாள் தெரு கிங் சூப்பர் மார்கெட் பின்புரம் உள்ள தார் சாலையில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது.
இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் அப்பகுதி வாசிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இதனால் டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மேற்கூறிய இடத்தில் இருந்து தேங்கியுள்ள நீரை அகற்றுவதுடன், முறையான வடிகால் அமைத்து இது போன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மேலும் இப்பகுதியில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகள் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது எனவும், அப்பகுதியில் மின் விளக்கு அமைக்க ஆவண செய்ய வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைளாகும்.