தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெருவில் கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையால் சாலையின் பள்ளமான பகுதியில் குளம் போல காட்சி தருகிறது.
இப்பள்ளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் போதுமான தெரு மின்விளக்குகளும் எரிவதில்லை.
ECR சாலையில் இருந்து கடலை இணைக்கும் இச்சாலை சில மாதங்களுக்கு முன் தான் புதியதாக போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே உடனடியாக ஊராட்சி நிர்வாகம் காசிம் அப்பா தெருவில் ஏற்பட்ட பள்ளத்தை மூடி மக்கள் நடமாடும் வகையில் போர்கால அடிப்படையில் செய்தி தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.