48
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெரு ஏஜே நகரில் செல்ல வழி இல்லாமல், சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏஜேநகரில் மழை நீர் தேங்கி நிற்கிறது. நீர் செல்லும் வழிகள் ஏதும் இல்லாததால் பள்ளமான சாலையிலேயே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெறும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மழை நீருடன் சாக்கடை கழிவு நீர், கலந்து தேங்கி நிற்கிறது. இதனால், சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் மேல் கழிவுநீர் விழுகிறது.மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவ,மாணவிகள் மிகுந்த சிரமத்துடனே சென்று வருகினூ. மழைநீர் தேங்கமால் இருக்க, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.