170
அதிராம்பட்டினத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான மக்கள் பணி நிமித்தமாக பட்டுக்கோட்டைக்கு சென்று வருகின்றனர்.
அதனால் இப்பாதை எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும்.
இந்நிலையில் புதிதாக சாலைகள்.அமைக்க பகுதி வாரியாக தனியாருக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டது.
சாலைகள் போடப்பட்டு ஒருமாதம் கூட ஆகாத நிலையில் ஆங்காங்கே சிதிலமடைந்து சின்னாபின்னமாகி உள்ளன.
அந்த வகையில் காளி கோவில் எதிரே புதிய தார்சாலை சேதமடைந்து போக்கு வாரத்திற்கு இடையூறாக உள்ளன.
கோடி ரூபாயானாலும் கேடிகளுக்கு போக மீதத்தில் தான் தார் சாலை அமைக்கின்றனர். ஆதலால்தான் இந்த இழி நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது என்கின்றனர் வாகன ஓட்டிகள்.