131
அதிரையில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இம் மழையினால் அதிரையில் உள்ள சில தரமற்ற சாலைகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் சென்றுள்ளது.
அதிரை பேரூராட்சிக்குட்பட்ட MSM நகரில் மழை நீர் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இப்பகுதியில் மழை நீர் தேங்கி கிடப்பதை அதிரை பேரூராட்சி மெத்தனப்போக்கு காட்டாமல் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல்: இக்பால்