Home » அதிரையில் மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் அத்துமீறும் காமக்கொடூரர்கள்!

அதிரையில் மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் அத்துமீறும் காமக்கொடூரர்கள்!

0 comment

அதிராம்பட்டினம் டேஷ்___ தெருவை சேர்ந்தவர் கமருதீன்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
சற்று மன நலம் பாதிக்கப்பட்ட இவரை வயதானவர்கள் முதல் இளைஞர்கள் வரை பாலியல் வன்புணர்வுக்கு பயன்படுத்துகிறார்கள் என அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளன.

இது குறித்து கமருதீனிடம் நடத்திய விசாரணையில், வாலிபர்கள் முதற்கொண்டு வயதானவர்கள் வரை இவரை வன்புணர்வுக்கு அழைத்து சென்றுள்ளனர் என்றும், கமருதீன் மறுக்கும் பட்சத்தில் அந்த இளைஞனை அடித்து பனியவைத்துள்ளனர்.

மேலும் கமருதீனுக்கு போதைதரு வஸ்த்துக்களை அவரின் விருப்பம்மின்றியே வாயில்.ஊற்றப்பட்டு இச்செயலில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிகிறது.

இப்பாதக செயலில் ஈடுபடுபவர்கள் பற்றிய முழு விபரமும் நமது அதிரை எக்ஸ்பிரஸ் புலனாய்வு குழுவுக்கு கிடைத்துள்ள நிலையில், தவறு செய்பவர்கள், செய்தவர்கள் இனியும் தங்களின் போக்கை மாற்றி கொள்ளாவிட்டால் புகைப்படத்துடன் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே அஞ்சும் அதிரை எக்ஸ்பிரஸ் குழும ஒப்புதலுடன், இணையதளம், முகநூல், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகத்தின் உதவியுடன் தக்க ஆதாரத்தை இணைத்து வெளியிடப்படும் என இதன் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter